Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் செடியில் புதிய பூ! டாக்சிக் மனைவி.. தவமாய் தவமிருந்த தவான்! இப்போ காதலில் விழுந்துட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஷிகர் தவான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் காதலில் விழுந்த ஷிகர் தவான் அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களின் ஒருவர் ஷிகர் தவான். டெஸ்ட், ஒன் டே, டி20 போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக அவரது ஸ்பெஷல் ஆட்டம் மிஸ் ஆகி இருந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக ஷிகர் தவான் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

கிரிக்கெட் உலகில் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து விவாகரத்து பெற்ற ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்ற காதல் வாழ்க்கையின் பயனாக ஜோராவர் என்ற குழந்தை பிறந்தது.

Shikhar Dhawan sports chennai

இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது தனது மனைவியான ஆயிஷா தன்னை மனதளவில் துன்புறுத்துவதாகவும் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஷிகர் தவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2020 ஆம் ஆண்டு முதலே தானும் தனது மனைவியும் வாழவில்லை எனவும், திருமணத்திற்கு பிறகு இந்தியாவில் இருப்பேன் என சொன்ன ஆயிஷா தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தொடர்ந்து நீதிமன்றம் நடத்திய விசாரணையில் ஷிகர் தவானுக்கு அவரது மனைவியான ஆயிஷா முகர்ஜி மன ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் வாங்கிய சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும், கணவருக்கு பிறந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆயிஷா முகர்ஜி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து கடந்த 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது. ஷிகர் தவானின் குழந்தையை அடிக்கடி இந்தியா வந்து காட்ட வேண்டும் எனவும், ஷிகர் தவான் விரும்பினால் மகனை ஆஸ்திரேலியா சென்று பார்க்கலாம் எனவும் உத்தரவிட்டது. இதை எடுத்து இந்த தம்பதி சட்டபூர்வமாக பிரிந்தது.

தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த ஷிகர் தவான் தற்போது மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அயர்லாந்து சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் ஷிகர் தவான் டேட்டிங்கில் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இந்நிலையில் தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ஷிகர் தவான். அயர்லாந்து சேர்ந்த சோஃபி ஷைன் என்பவரை தான் காதலிப்பதாக கூறியுள்ளார்.

அயர்லாந்து சேர்ந்த சோஃபி ஷைன், நார்தன் டிரஸ்ட் என்று அமெரிக்க நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். தற்போது மீண்டும் காதலில் விழுந்திருக்கும் ஷிகர் தவானின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+