6 மாத கொடுமை.. அப்போ கூட ஒரு சொட்டு கண்ணீர் விடலையே.. பாண்டியா கற்றுத்தந்த 7 மேஜர் விஷயங்கள்
சென்னை: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வெல்லவும், இந்த சீசன் முழுக்க இந்தியா பல போட்டிகளில் வெல்லவும் முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கோலி பேட்டிங், ரோஹித் கேப்டன்சி, பும்ரா, அர்ஷிதீப், அக்சர் , பாண்டியா பவுலிங், சூர்யா பீல்டிங் என்று ஆல் ரவுண்டர் ஆட்டம் காரணமாக இந்திய அணி வென்றது.

6 மாத கஷ்டம்: முக்கியமாக பாண்டியா போட்ட கடைசி ஓவர் மற்றும் 17வது ஓவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது.
கடந்த 6 மாதங்ககளாக பாண்டியா கடுமையாக கஷ்டப்பட்டு வந்தார் . அவரும் அவர் மனைவி நடாஷாவும் பிரிய போவதாக செய்திகள் வந்தன. பின்னர் அது ஓபன் ரிலேஷன்ஷிப் என்றும் செய்திகள் வந்தன. மும்பை இந்தியன்ஸ் அணி அவர் கேப்டன்சி கீழ் லீக் ஆட்டங்களில் இருந்தே ஐபிஎல்லில் வெளியேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டன் ஆனது விமர்சனங்களை சந்தித்தது. அவரை களத்திலேயே ரசிகர்கள் நாய் என்று அழைக்கும் அளவிற்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மாற்றம்: ஆனால் அதை எல்லாம் தாண்டி பாண்டியா நேற்று வென்று கொடுத்துள்ளார். நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வெல்லவும், இந்த சீசன் முழுக்க இந்தியா பல போட்டிகளில் வெல்லவும் முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
1. வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை தொழிலில் காட்ட கூடாது. உங்கள் என்ன நடக்கிறதோ நடக்கவில்லையா.. உங்களை வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்கணும்.
2. உலகமே உங்களை சமயங்களில் எதிர்க்கும், உங்களை மிக மோசமாக விமர்சனம் செய்யும். சிலரின் கதையில் நீங்கள் வில்லனாக கூட இருக்கலாம்.. ஆனால் உங்களை நிரூபிக்க உங்களுக்கும் ஒரு காலம் வரும். ஹர்திக் பாண்டியா போன மாதம் வரை பல கிரிக்கெட் ரசிகர்களின் வில்லனாகவே இருந்தார்.
3. அவரை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தனர், கிண்டல் செய்தனர். ஆனால் அதை எல்லாம் ஹர்திக் பாண்டியா தலையில் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவையற்ற விமர்சனங்களை தலையில் ஏற்றாமல் இருப்பதே மிகப்பெரிய பாசிட்டிவ் விஷயமாக மாறும்.
4. உங்கள் மீது விமர்சனம் இருக்கும் போது.. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். ஒரு நாள் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் கரையை போக்க முடியாது. பாண்டியா தன் மீதான விமர்சனங்களை எல்லாம் ஒரு நாளில் கரைக்கவில்லை. இந்த சீசன் முழுக்கவே அவர் சிறப்பாக ஆடினார்.
5. உங்கள் பர்சனல் விஷயங்களில் பல நடக்கலாம். உலகமே உங்களை எதிர்க்கலாம். நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் போதும், அதற்கான வேலைகளை செய்தால் போதும் நீங்கள் வெல்ல முடியும்.
6. என்ன மோசமான விஷயம் நடந்தால் இந்த சீசன் முழுக்க ஹர்திக் பாண்டியா அந்த பிரஷரை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஒரு இடத்தில் அவர் தனிப்பட்ட வகையில் கஷ்டப்படுகிறார் என்று தெரியாத அளவிற்கு நடந்து கொண்டார்.
7. உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும்.. ஹர்திக் பாண்டியா போட்ட 20வது ஓவர் போல.. உங்களுக்கு என்று ஒரு வாய்ப்பு வரும். அப்போது கூட உங்களை வீழ்த்த பலரும் காத்து இருப்பார்கள். ஆனால் மில்லர் விக்கெட்டை எடுத்து வெற்றியை நாட்டியது போல.. நீங்களும் கவனமாக செயல்பட்டு உங்களை நிரூபிக்க வேண்டும். இப்படி கஷ்டம் எல்லாம் போக உங்களுக்கு என்று கண்ணீர் விட ஒருநாள் வரும்.. நேற்று பாண்டியாவிற்கு வந்தது போல அப்போது ஆனந்த கண்ணீர் விட்டுக்கொள்ளுங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications