வலுக்கும் மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு.. 2 விருதுகளை திரும்ப அளிப்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு!
டெல்லி: மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதன்பின்னர், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
பஜ்ரங் புனியா: இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மல்யுத்த வீராங்கனை ஷாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் பேட்டியளித்தார். பிரஸ்மீட்டில் கண்ணீருடன் பேசிய அவர், இனி மல்யுத்த போட்டியில் நான் விளையாட போவதில்லை என்று அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.
'நீதிக்காக நாங்கள் உணர்வுபூர்வமாக முழுமூச்சுடன் போராடினோம். ஆனால் கடைசியில் பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் இனி எப்படி மல்யுத்த களத்தில் நீடிக்க முடியும். இத்துடன் மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன்" என்று கூறினார். இதனை தொடர்ந்து மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வினேஷ் போகத்: சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்களின் இந்த எதிர்ப்பினை அடுத்து சஞ்செய் சிங் தேர்வை ரத்து செய்தது. இந்த நிலையில், மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'மத்திய அரசின் தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை நான் திரும்ப அளிக்க முடிவெடுத்திருக்கிறேன்" என்றார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால் இப்படி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பிரதமர் மோடிக்கும் உருக்கமான கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில், நாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த பதக்கங்களை எல்லாம் திரும்ப வழங்க வேண்டுமா? ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்க வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications