For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறிசேன அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்... பாதுகாப்பு அமைச்சரானார் பொன்சேகா!

Google Oneindia Tamil News

கொழும்பு : இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வென்று புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவர் ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய நபர்களை நியமித்துள்ளார்.

25 ministers and 10 MoS in Sirisena's cabinet

மேலும், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி அமைச்சராக கலாநிதி ஹர்ஸ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன, கல்வித் துறை அமைச்சராக கபீர் ஹாசிம்.

பொது அலுவல்கள் அமைச்சகத்தின் சஜித் பிரேமதாச, வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராக ரவி கருணாநாயக்க, வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர, ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சராக ஜெயந்த கருணாதிலக, மின்சாரம், எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையின் அமைச்சராக பாட்டலி சம்பிக்க ரணவக்க, நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பைசர் முஸ்தபா, விமானத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், விவசாய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக கரு ஜயசூரியவும், கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத் துறை அமைச்சராக ரோசி சேனநாயக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சராக நவீன் திசாநாயக்க.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பதவி

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சராக அர்ஜுன ரணதுங்கவும், மீன்வளத் துறை அமைச்சராக ரிஷாத் பதியுதீன்தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும், தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் துறை அமைச்சராக நிறோசன் பெரேராவும், நாடாளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சராக ஜோசப் மைக்கல் பெரேராவும், சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக லட்சுமன் கிரியல்லவும், கலாசார மற்றும் சமய விவகாரங்கள் துறை அமைச்சராக ஜோன் அமரதுங்கவும், மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான துறைக்கு எம்.ஏ.சுமந்திரனும், பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி துறைக்கு எம்.கே.டி.எச்.குணவர்தனவும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இணை அமைச்சர்களாக நிதித் துறைக்கு எரான் விக்கிரமரட்னவும், கல்வித் துறைக்கு அகில விராஜ் காரியவசம்வும், சுகாதாரத் துறைக்கு புத்திக்க பத்திரணவும், ஊடகத் துறைக்கு சுஜீவ சேனசிங்கவும், வெவிவகார அலுவல்கள் இணை அமைச்சராக ருவான் விஜயவர்தனவும், நீதி மற்றும் சட்ட அலுவல்கள் இணை அமைச்சராக அஜித் பி.பெரேராவும், மீன்வளத் துறை இணை அமைச்சராக பாலித ரங்கேபண்டாரவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் இணை அமைச்சராக அஜித் மன்னப்பெருமவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறையின் இணை அமைச்சராக ராஜன் ராமநாயக்கவும், மரநடுகை மற்றும் நீர்ப்பாசனத் துறையின் இணை அமைச்சராக பி.திகாம்பரமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
The Srilankan president Maithiripala sirisena gave minister postings for 25 persons and MoS for 10 persons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X