மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு.. அதிர்ச்சி!
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அவர்களில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே இரு படகுகளில் 16 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து அவர்களை இலங்கை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல, இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் மேலும் மூன்று படகுகளை முற்றுகையிட்ட இலங்கை கடற்படையினர் அந்த படகுகளையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் தாக்கியதோடு 12 மீனவர்களையும் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளது அப்பகுதி மீனவர்களிடையே மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications