கைது செய்யப்பட்ட 82 தமிழக மீனவர்களையும் சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 82 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப் படுவதும், கைது செய்யப் படுவதும் தொடர்கதையாகி விட்டது. நேற்று முன்தினம் நடுக்கடலில் மின் பிடித்துக் கொண்டிருந்த 82 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 46 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 16ஆம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
அதேபோல், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 36 பேரை வரும் 30ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications