மனைவியுடன் அமெரிக்காவுக்கு ஓடினார் பசில் ராஜபக்சே... இன்னொரு தம்பி பாங்காக் ஓட்டம்
கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து துரத்தப்பட்டுள்ள ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே தனது மனைவியுடன் இன்று அதிகாலை அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போயுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளிதழின் இணையதள செய்தி தெரிவிக்கிறது.
சில தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ளது. கொழும்பு, காட்டுநாயகே பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தின் விஐபி பகுதி வழியாக இருவரும் போனதாக அந்த செய்தி கூறுகிறது.
பின்னர் துபாய் வழியாக லாஸ் ஏஞ்சலெஸ் செல்லும் விமானத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர்கள் கிளம்பிச் சென்றதாகவும் இச்செய்தி கூறுகிறது. எமிரேட்ஸ் விமானம் மூலமாக இவர்கள் போனார்களாம்.

அதேபோல அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இன்னொரு தம்பி டட்லி ராஜபக்சே தேர்தலுக்கு முன்பு கொழும்பு வந்திருந்தார். விமான நிலைய வளாகத்திலேயே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரும் தற்போது கொழும்பிலிருந்து போய் விட்டார். அவர் நேற்று காலை பாங்காங் கிளம்பிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரும் நேற்று துபாய் கிளம்பி்ப் போனதாக டெய்லி மிர்ரர் செய்தி கூறுகிறது.
விமான நிலையத்தில் கண்காணிப்பு:
ராஜபக்சே தோல்விக்குப் பின்னரும் பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக கருணா, கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications