நிதி மோசடி: மகிந்த ராஜபக்சே தம்பி மாஜி அமைச்சர் பசில் 3-வது முறையாக கைது
கொழும்பு: நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி பசில் ராஜபக்சே 3-வது முறையாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் மைத்ரிபால சிறிசேன அதிபரானதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன. இதனால் மகிந்த ராஜபக்சே தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் அவர் மீது போடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும் மற்றொரு நிதி மோசடி வழக்கிலும் பசில் ராஜபக்சே மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜ்பக்சே மகன் நாமல் ராஜபக்சேவும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே 3-வது நிதி மோசடி வழக்கில் மீண்டும் இன்று பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் இன்று ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications