இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளித்தது இங்கிலாந்து.. இந்திராகாந்தி எதிர்த்தார்... புதிய தகவலால் பரபரப்பு
கொழும்பு: 1980களில் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் இலங்கை ராணுவத்துக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது என்றும் இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1984ஆம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் காலிஸ்தான் போராளிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளிக்கவும் இங்கிலாந்து அரசு அனுமதி அளித்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தின் ராணுவத்தில் எஸ்.ஏ.எஸ். என்றசிறப்பு இராணுவப் படையணியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்ட தனியார் ராணுவ பயிற்சி நிறுவனம் செயப்பட்டு வந்தது.
இந்த தனியார் ராணுவ பயிற்சி நிலையத்தில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் 1980களில் தமிழ் போராளிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து அரசு அனுமதித்ததாக புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
மேலும் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் தாட்சரிடம் இதற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திர காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இங்கிலாந்து உரத்து குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த புதிய ஆவணங்கள் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications