தம்பி மகிந்த ராஜபக்சேவை கழற்றிவிட்டார் அண்ணன் சமல்! ரணில் அரசில் அமைச்சராகிறார்!!
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசில் தாம் இணைய இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே அறிவித்துள்ளார். இது ராஜபக்சே குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகிந்த ராஜபக்சே தமது ஆட்சிக் காலத்தில் சகோதரர்கள் அனைவரையும் அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவால் பிரதமராக முடியாமல் போனது. தற்போது வெறும் எம்.பி.யாக மட்டுமே மகிந்த ராஜபக்சே இருக்கிறார்.

இந்த நிலையில் அவரது அண்ணன் சமல் ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கத்தில் இணையப் போவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர கட்சியில் இருக்கிறேன். இக்கட்சியின் தலைவர் அதிபர் சிறிசேன எடுக்கும் முடிவுகளை ஏற்றுச் செயல்படுவேன்.
இதனடிப்படையில் சுதந்திர கட்சி, ரணில் தலைமையிலான தேசிய அரசியல் இணையும் நானும் இணைவேன் என்றார். இது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications