ராஜபக்சேவிற்கு உதவிய சீனாவின் ''எம்எஸ்எஸ்''.. ஆசியாவின் அண்ணனாகும் சீனா.. பின்னணி என்ன?
இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின் சீனா இருப்பதாக ஒரு கருத்து வைக்கப்படுகிறது.
கொழும்பு: இலங்கையில் நடக்கும் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள், ஆசியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இலங்கையில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு பின் சீனா இருப்பதாக ஒரு கருத்து வைக்கப்படுகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.
இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரணில் விக்ரமசிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சீனா ஆதரவாளர்
ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடிக்கு நெருக்கமானார். அரசியல் சார்ந்து மட்டுமில்லாமல் தனிப்பட்ட விஷயங்களிலும் இவர்கள் நல்ல நண்பர்கள். இந்த நிலையில் மோடிக்கு அவ்வளவு நெருக்கம் இல்லாத ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். இவர் ஒரு சீனா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா உள்ளதா?
இது முழுக்க முழுக்க சீனா செய்த அதிரடி என்கிறார்கள். தன்னுடைய ஆதரவாளரை மீண்டும் அங்கு முக்கிய பொறுப்பில் பதவி ஏற்க வைக்க பல நாட்களாக சீனா திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்காக சீனாவின் எம்எஸ்எஸ் (Ministry of State Security -MSS) எனப்படும் உளவுப்படை பின்பிருந்து இயங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பிரச்சனை
இது இந்தியாவிற்கு பெரிய தலைவலியை தந்து உள்ளது. இந்தியா ஆசியாவில் வைத்திருக்கும் குறைந்தபட்ச அழுத்தமும், ஆதிக்கமும் கூட கையைவிட்டு போக போகிறது என்று பலர் எச்சரிக்கை விடுகிறார்கள். முக்கியாக இது இந்தியாவிலும் பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆசியாவில் என்ன நடக்கும்
இது ஆசியா அரசியலை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆசியாவில் உள்ள இரண்டு முக்கிய நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் பெரிய நட்பு நாடுகள் ஆகிவிட்டது. இந்தியா ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும் பெரிய அளவில் நெருக்கம் காட்டுவதில்லை. இதனால் சீனா ஆசியாவின் ''பெரிய அண்ணாக'' மாற போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications