மனைவியின் பிரசவத்திற்கு கள்ளக்காதலியை அழைத்து வந்த கணவருக்கு தர்ம அடி
கொழும்பு: இலங்கையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கவனித்துக் கொள்ள கள்ளக்காதலியை அழைத்து வந்த நபரை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.
இலங்கையைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அவரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும், உங்களின் மனைவியை கவனித்துக் கொள்ள யாராவது இங்கேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே அவர் தனது மனைவியிடம் தனக்கு தெரிந்த பெண்ணை உதவிக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.
உதவி செய்ய வரப்போவது தனது கணவரின் கள்ளக்காதலி என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர் தனது உடன்பிறப்புகளுக்கு போன் செய்தார். தகவல் கிடைத்த வேகத்தில் மருத்துவமனைக்கு வந்த உடன் பிறப்புகள் மச்சானுக்காக காத்திருந்தனர்.
மச்சானுடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை விசாரித்ததில் கள்ளத்தொடர்பு பற்றிய அனைத்தையும் அவர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து மனைவியின் உடன்பிறப்புகள் மச்சானை நையப் புடைத்தனர்.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அறிவுரை வழங்கி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications