இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி
இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் மூலம் அதிக அளவில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை.
அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி செய்தனர்.

இந்தியப்பெருங்கடலில்
முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்திய பெருங்கடல் எல்லை தட்டுக்களிலேயே அதிக அளவிலான சுனாமி பேரலைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம் பேரலைகள்
100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்திய பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தட்டுக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால், சுமத்ராவில் ஏற்பட்டதை போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலைகளும் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறினர்.

2004 டிசம்பர் 26
2004, டிசம்பர், 26க்கு பின் மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட சொல் சுனாமி தான். இது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப் பேரலை' எனவும் அழைக்கப் படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப் பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தின.

3 லட்சம் பேர் மரணம்
சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இதில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது. உயிர்ச் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்தியாவில் அழிவு
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியா கினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.

தமிழக கடலோரங்களில்
தமிழக கடலோர மாவட்டங் களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. கடலை நம்பி வாழ்ந்த மீனவ குடும்பங்கள், கடற்கரை பகுதி யிலுள்ள வழிபாட்டு தலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என குடும்பம் குடும்பமாக பலியாகியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications