இலங்கை ராணுவமே பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் தகவல்
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளார் பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர்.
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, வங்காளதேசம், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலை தீவு, நேபால் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது, உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் பேசும் போது, ‘2009 மே மாதம் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயதான பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினரே, படுகொலை செய்தனர்.
போர் குற்றவாளிகளான இலங்கைப் படையினர் படுகொலைகளை நிறைவேற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது.
அண்மையில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ராணுவப் புலனாய்வு பிரிவு குறித்து அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்று கருதுகிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications