‘ராகுல் பிரதமராவது நிச்சயம்’... அடித்துச் சொல்கிறார் ராஜீவை துப்பாக்கியால் அடித்த சிங்கள வீரர்

கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்பட்டார் என்பதை அறிந்தால் நம்ப மாட்டார்கள்.
முன்னாள் கடற்படை சிப்பாய்....
தற்போது 46 வயதாகும் விஜித ரோஹண விஜிதமுனி, முன்னாள் கடற்படை சிப்பாய் ஆவார்.
திடீர்த் தாக்குதல்....
கடந்த 1987ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களின் விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினார்.
மனநோயாளி என விடுதலை....
இதனையடுத்து 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஜோதிடர் அவதாரம்....
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது ஜோதிடராகவும், மியூசிக் சிடி விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.
பிரபல ஹிந்திப்பாடல்கள்...
இவரது கடையில் புத்த மதப் பாடல்கள் தொகுப்பும், சிங்களப் படப்பாடல்கள் தொகுப்பும், சில ஹிந்திப் பட பாடல்களும் உள்ளன.
ஜோதிடம்...
ராஜீவைத் தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் இந்தியப் பத்திரிக்கை ஒன்று பேட்டி கேட்டது. ஆனால், அதற்குக்கு வாய் திறக்க மறுத்து விட்ட விஜேமுனி, ராஜபக்சே குறித்து மட்டும் ஊடகத்திற்கு ஜோதிடம் கூற சம்மதித்தார்.
ராஜபக்சேவுக்கு தோல்வி....
அப்போது அவர் கூறியதாவது, ‘அடுத்த தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார்' என்றார்.
பாஜக ஆட்சியை பிடிக்கும்....
மேலும், இந்திய அரசிய அரசியலையும் தான் கவனித்து வருவதாகவும், வரும் 2014ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஜோதிடம் தெரிவித்துள்ளார்.
ராகுல் பிரதமராவார்...
ராஜீவ் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த விஜேமுனி,' ராகுல் நிசயம் பிரதமராவார். ஆனால், இப்போதல்ல, இதற்கும் அடுத்தத் தேர்தலில்...'எனக் கூறியுள்ளார்.
தீர்க்காயுசு....
ராகுலுக்கு தீர்க்காயுசு எனவும் தனது ஜோதிட திறமை மூலம் கணித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இவர்.
தேசத்துரோகமல்ல....
மேலும், மற்றொரு சிங்கள் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விஜேமுனி, ‘தான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல என்றும் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, பறந்து நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசியலமைப்புக்குள் புகுத்தியதாலேயே அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications