அப்பீலை இந்தியா வாபஸ் பெற்றால் 5 மீனவர்களை மன்னித்து விடுவிக்க ராஜபக்சே தயார்- இலங்கை அமைச்சர்
கொழும்பு: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னித்து விடுதலை செய்யத் தயார்தான். ஆனால் இந்திய அரசுதான் தனது மேல்முறையீடு வழக்கை கைவிடுவதாக இருந்தால் இது சாத்தியம் என்று இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.
இந்நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ராஜபக்சே தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர்.

அதிபர் தயார்...
இது தொடர்பாக பிரபா கணேசன் கூறுகையில், ‘தூக்கு தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்களை மன்னித்து விடுவிக்க அதிபர் தயாராக இருக்கிறார். ஆனால் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற வேண்டு்ம்.

விரைவில் மன்னிப்பு...
இந்த வழக்கு நடந்தால் ஆறு மாதங்களாவது இழுத்தடித்து விடும். மாறாக அதை வாபஸ் பெற்றால், இரண்டு அல்லது மூன்று நாளில் மன்னித்து விடுதலை செய்ய ராஜபக்சே தயாராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தேவையில்லாத செலவு...
இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய போதும் ராஜபக்சே இதையே தெரிவித்ததாகவும் கூறியுள்ள கணேசன், இது தேவையில்லாத செலவு என்றும் கூறியுள்ளார்.

போன் மூலம் தகவல்...
ஆனபோதும், தனது எண்ணத்தை கணேசன் மூலமாக இந்தியத் தூதரகத்திற்கு ராஜபக்சே தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும் அமைச்சர் கணேசன் போன் மூலம் பேசியதை உறுதி செய்துள்ளது.

ஆலோசனை...
மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் பேசி விட்டு பதிலளிப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி அளித்துள்ளதாகவும் கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிரடி திருப்பம்..
தமிழக மீனவர்களின் தூக்கை எதிர்த்து நேற்று மேல்முறையீடு செய்யப் பட்டுள்ள நிலையில், கணேசனின் இப்பேட்டி மூலம் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications