மாகாணசபையின் பேச்சை கேட்கத் தேவையில்லை: கிளிநொச்சி ராணுவ தளபதி

Subscribe to Oneindia Tamil

No need to obey Provincial governments' order: Kilinochchi military head
கொழும்பு: ஜனாதிபதியே இலங்கை ராணுவத்திற்கு தளபதியாக இருப்பதால் மாகாண சபைகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என கிளிநொச்சி ராணுவ தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இலங்கை அரசு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

போர்க்காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்ட இலங்கை ராணுவம் தற்போது அபிவிருத்திக்காக பாடுபட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. மீண்டும் ஒருமுறை ஆயுதப் போராட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ராணுவம் கவனமாக உள்ளது.

வடக்கு மாகாணசபையில் ஆட்சி செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்குப் பகுதியில் ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம் மாகாண சபைகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியே ராணவத் தளபதியாக உள்ளார். அதனால் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் எல்லாம் அரசியல் நலன் சார்ந்தவை தான். புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனும் இதில் அடக்கம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+