'தாராள பிரபு' பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.. எதுக்கு தெரியுமா?
இலங்கை: பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருடன் பாக்., அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் உடன் சென்றிருந்தனர்.
இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை நேரில் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்ததோடு, பாதுகாப்புத் துறை உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு, பாதுகாப்பு ஒத்துழைப்பிற்காக, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, பயங்கரவாதம், குற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்துறை பகிர்வு தொடர்பான விஷயங்களை கையாள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் வலுவான கூட்டு தேவை என்பதை இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அடிக்கடி கூட்டங்களை நடத்துவதற்கும், உயர் மட்ட மற்றும் பிரதிநிதிகள் மட்ட பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் இரு நாடுகள் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதுமட்டுமின்றி, இலங்கையில் விளையாட்டு மேம்பாட்டிற்காக 52 மில்லியன் வழங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான்-இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவத் துறையில் (எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 100 உதவித்தொகைகளையும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications