இலங்கையில் மோடி சுற்றுப் பயணம்.. அதிபர் சிறிசேனாவுடன் சந்திப்பு.. இரவு விருந்தில் பங்கேற்பு
இலங்கை அதிபர் சிறிசேனாவை அவரது மாளிகையில் மோடி சந்தித்தார். அங்கு, மோடிக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் அதில் பங்கேற்றார்.
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் 'வெசாக்' அதாவது, புத்த பூர்ணிமா தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை முதல் 14ந் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது. புத்த பூர்ணிமா திருவிழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றார். சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேரில் சென்று வரவேற்றார்.
கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன். pic.twitter.com/vtoeSloutV
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
"கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன்" என மோடி அப்போது தமிழிலேயே டிவிட் செய்தார்.
இதன்பிறகு பழமையான புத்தமத கோயிலுக்கு மோடி விஜயம் செய்தார்.
இலங்கையில் எனது நிகழ்ச்சிகள் அமைதியும் நேர்மறை ஆற்றலும் நிரம்பிய சீமா மாலக்க பௌத்த கோவிலிற்கான ஒரு விஜயத்துடன் ஆரம்பிக்கிறது. pic.twitter.com/lZ9egyJxCa
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
"இலங்கையில் எனது நிகழ்ச்சிகள் அமைதியும் நேர்மறை ஆற்றலும் நிரம்பிய சீமா மாலக்க பௌத்த கோவிலிற்கான ஒரு விஜயத்துடன் ஆரம்பிக்கிறது." என தமிழிலேயே டிவிட் செய்திருந்தார் மோடி.
Delighted to meet President @MaithripalaS in Colombo. pic.twitter.com/Ubh7tYIXUk
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
இதன்பிறகு, அதிபர் சிறிசேனாவை அவரது மாளிகையில் மோடி சந்தித்தார். அங்கு, மோடிக்கு இரவு விருந்து பரிமாறப்பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் அதில் பங்கேற்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications