"தலைவர்" எம்.ஜி.ஆர்.. இலங்கையில் நின்று கொண்டு புகழ்ந்த மோடி!
இந்தியாவின் தேசிய தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணில் பிறந்தவர் என்று இலங்கையில் பேசிய மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நுவரெலியா: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணின் மைந்தர். அவர் இந்தியாவின் தேசியத் தலைவர் என்று இலங்கை நுவரெலியாவில் மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இலங்கை பயணத்தை முன்னிட்டு தமிழில் டுவிட்டிய மோடி, இன்று மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய போதும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பேசினார்.

இந்தியா வம்சாவளியினர்
புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா - இலங்கையின் முக்கிய இணைப்பாக மலையக தமிழர்கள் விளங்குகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதை உணர்த்தியுள்ளனர்.

இந்தியா - இலங்கை உறவு
இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது. 700 இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இந்தியா - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்திடுவது தனது கடமை ஆகும்.

இந்தியா ஒத்துழைப்பு
இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து வருகிறது. மலையக தமிழர் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்தியா ஒத்துழைப்பு தரும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசிய தலைவராக விளங்குகிறார் எம்ஜிஆர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன்.

முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகிற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு. அது மலையக மக்கள் அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications