For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 18 தமிழினப் படுகொலை நாளில் வீடுகளில் சிங்களக் கொடிகளை பறக்க விடுங்கள்- ராஜபக்சே கொக்கரிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழினப் படுகொலை நாளான மே 18-ந் தேதியன்று சிங்களவர்கள் தங்களது வீடுகளில் சிங்களக் கொடிகளை பறக்க விட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நாள் மே 18. இந்த இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Rajapaksa calls to hoist Sinhala flags on May 18

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி தமிழர்களை கொத்து கொத்தாக படுகொலை செய்தது அப்போதைய ராஜபக்சே அரசு. இந்த தமிழினப் படுகொலையின் 6வது ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே, தமிழர் நெஞ்சங்களில் வேல்பாய்ச்சுவது போல மே 18-ந் தேதியன்று பயங்கரவாதத்தை தோற்கடித்த நாம் நமது வீடுகளில் சிங்களக் கொடிகளை ஏற்றுவோம் என்று கொக்கரித்துள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

English summary
Former Srilanka President Mahinda Rajapaksa has called to hoist Sinhala flags on May 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X