For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்ததை நினைவூட்டும் ராஜபக்சேவின் 4 லட்சம் பேஸ்புக் லைக்ஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது ஃபேஸ்புக் லைக்குகள் எண்ணிக்கை 4 லட்சம் தாண்டிவிட்டதை பெருமைபொங்க பகிர்ந்து வருகிறார். அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 2009-ல் 40 ஆயிரம் தமிழர்களை நினைவூட்டுகிறது 4 லட்சம் லைக்குகள் என்று தமிழர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ராஜபக்சே திரைப்பட நடிகராகவும் இருந்தவர். அதனால்தான் என்னவோ அரசியல் வாழ்க்கையில் ஆகச் சிறந்த நடிகராகவும் ஜொலிக்கிறார். யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் தமிழர் மனங்களை அவரால் வென்றெடுக்க முடியவில்லை.

இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை ஜாலங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்த ராஜபக்சே தவறுவதும் இல்லை. தமது ட்விட்டர் பக்கத்தில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிகளிலும் பதிவிட்டு வருகிறார்.

இந்து பண்டிகைகள்

இந்து பண்டிகைகள்

இதேபோல் ஃபேஸ்புக் பக்கத்திலும் பெரும்பாலும் சிங்கள்ம, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பதிவுகளைப் போட்டு வருகிறார். இந்துக்கள் சார்ந்த பண்டிகைகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சகட்டுமேனிக்கு பதிவு செய்து "இணக்கமாக" இருப்பதாக காட்டிக் கொள்வதில் ரொம்பவும் முனைப்பு காட்டுகிறார் ராஜபக்சே.

தீபாவளி

தீபாவளி

இந்துக்களுடன் நேற்று தீபாவளியைக் கொண்டினேன் என்று பதிவை மும்மொழிகளில் போட்டு ஏகப்பட்ட படங்களைப் போட்டுள்ளார் ராஜபக்சே.

பட்ஜெட் தாக்கல்..

பட்ஜெட் தாக்கல்..

அதற்கு முன்னர் இலங்கை பட்ஜெட் தாக்கல் பற்றி மும்மொழிகளிலும் பதிவிட்டு அப்டேட் செய்து கொண்டிருந்தார்.

4 லட்சம் லைக்குகள்

4 லட்சம் லைக்குகள்

இந்த நிலையில்தான் அவரது ஃபேஸ்புக் பக்கம் 4 லட்சம் லைக்குகளை எட்டியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டார்.

40 ஆயிரம் தமிழர் படுகொலை

40 ஆயிரம் தமிழர் படுகொலை

இதற்கு பதிலடியாகத்தான் உங்களது 4 லட்சம் லைக்குகள் என்பது 2009ஆம் ஆண்டு 40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்ததை நினைவூட்டுகிறது என்று தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நமல் ராஜபக்சேவுக்கு அதிகமாம்

நமல் ராஜபக்சேவுக்கு அதிகமாம்

ஆனால் மகிந்த ராஜபக்சேவை 2 ஆயிரம் பேர் கூடுதல் லைக்குகளை அவரது மகன் நமல் ராஜபக்சேவுக்கு கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Srilankan President Mahinda Rajapaksa's facebook page reaches 4 lakhs likes on yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X