அய்யயோ.... அடுத்து என்னையும் கைது செய்யப் போறாங்களே... அலறும் மகிந்த ராஜபக்சே
கண்டி: யோசித்த ராஜபக்சேவைத் தொடர்ந்து தம்மையும் மைத்ரிபால சிறிசேன அரசு கைது செய்து சிறையில் அடைக்கப் போகிறது என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புலம்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோசித்த ராஜபக்சே இலங்கை கடற்படை அதிகாரியாக இருந்தார். அப்போது அவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் நிதிமுறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்ற விசாரணையில் யோசித்த ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சே கூறுகையில், தற்போது மகன் யோசித்தவை கைது செய்துள்ள அரசு அடுத்து என்னை கைது செய்யும்.
பின்னர் என் மனைவி, மகன் மற்றும் சகோதரர்களையும் கைது செய்து சிறையில் தள்ளும். மைத்ரிபால அரசு என்னை பழிவாங்கட்டும்... என் குடும்பத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications