For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலஸ்தீனத்துடன் ஆன உறவை 'மேம்படுத்தி'விட்டு இன்று இஸ்ரேல் செல்லும் ராஜபக்சே!

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: பாலஸ்தீனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இன்று இஸ்ரேல் செல்கிறார் என்று அதிபரின் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் விஜயேனந்தா ஹிராத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது மனைவியுடன் ஜோர்டான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் கிளம்பினார். முதலில் ஜோர்டான் சென்ற அவர் பின்னர் பாலஸ்தீனம் சென்றார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று பாலஸ்தீனம் சென்ற ராஜபக்சேவுக்கு அந்நாட்டு பிரதமர் டாக்டர் ராமி ஹம்துல்லா மதிய விருந்து அளித்தார்.

Rajapakse to visit Israel today

இதையடுத்து பாலஸ்தீன அதிகாரிகளை சந்தித்த ராஜபக்சே இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீன தொழில் அதிபர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் அவர் இன்று பாலஸ்தீனத்தில் இருந்து கிளம்பி இஸ்ரேல் செல்வதாக அவரது ஒருங்கிணைப்பு குழு செயலாளர் விஜயேனந்தா ஹிராத் தெரிவித்துள்ளார்.

English summary
Sri Lankan president Mahinda Rajapakse who is touring in Palestine will leave for Israel today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X