126 பேர் கையெழுத்து.. மெஜாரிட்டி எம்.பிக்களின் ஆதரவுடன் சபாநாயகரை சந்தித்த ரணில்.. அடுத்த பரபரப்பு!
இலங்கையின் பிரதமராக இருக்க தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கூறி 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட ஆதரவு கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்கே ஒப்படைத்து இருக்கிறார்
கொழும்பு: இலங்கையின் பிரதமராக இருக்க தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கூறி 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட ஆதரவு கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்கே ஒப்படைத்து இருக்கிறார்
இது இலங்கை அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார்.
[உயிருக்கு பயம்.. அதிரடி படை உடை அணிந்து தப்பித்த இலங்கை அமைச்சர் ரணதுங்கா.. திடுக் தகவல்!]

கடிதம் அளித்தார்
இந்த நிலையில் 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட ஆதரவு கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து இருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே. அதன்படி உடனே பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

என்ன பலம்
இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 6 இடங்களை கொண்டுள்ளது. ஈழ மக்கள் குடியரசு கட்சி 1 இடத்தை கொண்டுள்ளது. இதனால் யாருக்கும் அங்கு மெஜாரிட்டி இல்லை.

எப்படி அளித்தார்
ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. ஆனால் அவருக்கு 126 பேர் ஆதரவு அளித்துள்ளார். மீதமுள்ள 20 பேர் யார் என்று முழுமையான விவரம் வெளியாகவில்லை. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆனால் என்ன
ஆனால் அதே சமயம் அந்நாட்டு அதிபரை சிறிசேனா அந்நாட்டு பாராளுமன்றத்தை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துவிட்டார். நவம்பர் 18ம் தேதி வரை அங்கு பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. இந்த விஷயத்தில்அந்நாட்டு அதிபருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பதால் பாராளுமன்றம் கூட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications