கட்சியில் சீட்டு கேட்ட மாஜி நடிகையை முழு நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜபக்சே நண்பர்- இலங்கையில் பரபர

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: உள்ளாட்சித் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவிக்க முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவின் நண்பர் கூறியதாக நடிகை மதுசா ராமசிங்கே அதிரடி குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார்.

உல்லாசத்துக்கு வர சொன்ன ராஜபக்சே நண்பர்

உல்லாசத்துக்கு வர சொன்ன ராஜபக்சே நண்பர்

இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு அழைத்து முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என 'லஞ்சம்' கேட்டிருக்கிறார்.

ராஜபக்சே கட்சியில் பணி

ராஜபக்சே கட்சியில் பணி

இச்சம்பவம் குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் தி சண்டேலீடர் ஏட்டின் இணைய பதிப்பிடம் கூறியுள்ளதாவது: ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்காக நான் பாடுபட்டிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால் நாமும் போட்டியிடலாம் என முடிவெடுத்தேன்.

ராஜபக்சேவிடம் புகார்

ராஜபக்சேவிடம் புகார்

ஆனால் ராஜபக்சேவின் நண்பரோ என்னை நிர்வாணமாக நிற்க வேண்டும் என கூறினார். இந்த கொடுமையை மகிந்த ராஜபக்சேவிடமும் தெரிவித்தேன்.

நடவடிக்கை எடுக்காத ராஜபக்சே

நடவடிக்கை எடுக்காத ராஜபக்சே

மகிந்த ராஜபக்சேவோ எதனையுமே கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறினார். என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இவ்வாறு நடிகை மதுசா ராமசிங்கே கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka Former President Mahinda Rajapaksa's close friend had been demanded sexual bribe from an actress Madusha Ramasinghe.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற