மிஸ்டர் மகிந்த ராஜபக்சே.. தலைகீழா நின்னாலும் பிரதமர் பதவி உங்களுக்கு இல்லை: மைத்ரிபால திட்டவட்டம்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒருபோதும் பிரதமர் பதவியை தரவே முடியாது என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரை அதிபர் மைத்ரிபால கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இருந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் எனக்கே பிரதமர் பதவியை மைத்ரிபால கொடுப்பார் என்று நம்பிக் கொண்டு கருத்துகளை தெரிவித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே. இதற்கு ஆப்படிக்கும் வகையில் மகிந்த ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மைத்ரிபால சிறிசேன.
அதில் ஆளும் சுதந்திர கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்றினால் அந்த அணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஒருவருக்குத்தான் தர வேண்டும்; அதே நேரத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் யாருக்குப் பிரதமர் பதவி என்பதை தானே தீர்மானிக்கும் அதிகாரமும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மகிந்த ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications