குருநாகலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து வடமாகாண கவுன்சிலர் சிவாஜிலிங்கம் போட்டி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து வடக்கு மாகாண சபை கவுன்சிலரான முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17-ந் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் சுதந்திர கட்சி சார்பாக குருநாகல் மாவட்டத்தில் மகிந்த ராஜபக்சே போட்டியிட உள்ளார். அவருக்கு ஆளும் கட்சியில் அதிபர் சிறிசேன உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் வடக்கு மாகாண சபை கவுன்சிலரான சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications