காமன்வெல்த் மாநாட்டில் போர்ககுற்றம் பற்றிப் பேசக் கூடாது.. இங்கிலாந்துக்குத் தடை?
கொழும்பு: இலங்கையில் நேற்று காமன்வெல்த் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டின்போது இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தாலும், அதை எழுப்பக் கூடாது என்று இலங்கை தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நேற்று 22வது காமன்வெல்த் உச்சி மாநாடு தொடங்கியது. இதை அதிபர் ராஜபக்சே தொடங்கி வைத்தார். இது இளைஞர் மாநாடாக, மக்கள் மன்ற மாநாடாக நடைபெறுகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கண்காணிப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுவேன் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியிருந்தார்.
ஆனால், நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக பேச இங்கிலாந்துக்கு அனுமதி கிடையாது என்று இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க இங்கிலாந்து பிரதமர் கேமரூன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து இலங்கை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மாநாட்டின்போது இலங்கை இங்கிலாந்து இடையேயான நட்புறவு குறித்தும் பேச வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications