கொழும்பு ராணுவ கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து.. ஆயுதங்கள் வெடித்துச் சிதறின.. மக்கள் ஓட்டம்
கொழும்பு: கொழும்பு நகரில் உள்ள ராணுவ கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு ஆயுதங்கள் வெடித்துச் சிதறியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் கொழும்பில் நடந்துள்ள மிகப் பெரிய சம்பவம் இது.

தீவிபத்தில் ஆயுதங்கள் வெடித்துச் சிதறி வெளியே வந்து விழுந்ததாலும், ஆயுதக் கிட்டங்கியில் ஒரு பகுதி பற்றி எரிந்ததாலும், அப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சல்வா என்ற இடத்தில் இந்த ராணுவ கிட்டங்கி உள்ளது. தற்போது இங்கு தீ கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் பெரும் புகை வந்தவண்ணம் உள்ளதால் தீ முழுமையாக அணையவில்லை என்று கூறப்படுகிறது.
தீவிபத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய ஆயுதங்களின் பாகங்கள், அருகில் உள்ள நெடுஞ்சாலை வரைக்கும் வந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். கிட்டத்தட்ட 3 கிலோமீட்ர் தூரம் வரை அவை வந்து விழுந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோலத்தான் வவுனியாவில் உள்ள ராணுவ கிட்டங்கியில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் இப்போது கொழும்பில் நடந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications