4000 விடுதலைப் புலிகள் ஒன்று கூடப் போகிறார்களாம்... 'பயந்து' போய்க் கூறும் சிங்கள தளபதி!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கில் நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயர்த்தியும், கெளரவப்படுத்தியும் பேசி வருகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள். இதனால் ஆங்காங்கு மறைந்து வாழ்ந்து வரும் கிட்டத்தட்ட 4000 விடுதலைப் புலிகள் மீண்டும் அணி திரளும் வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறோம் என்று கூறியுள்ளார் யாழ் பகுதிக்கான ராணுவ தளபதியான மஹிந்தா ஹதுரசிங்கே என்பவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிட்டத்தட்ட 4000 விடுதலைப் புலிகள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்கள் யாரும் அரசு நடத்திய புத்துணர்வு முகாமுக்கு வரவில்லை. இவர்கள் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நடத்தி வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு மீண்டும் அணி திரளும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம்.

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் தாக்குதலுக்கும் கூட முயற்சிக்கலாம். எனவே யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மேலும் பல ராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை செயலாளருக்கு நான் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்றார் ஹதுரசிங்கே.

கடைசியாச் சொன்னீங்களே.. அதைச் சொல்லுங்க முதல்ல....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+