இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: இலங்கை

Subscribe to Oneindia Tamil

Sri Lanka rejects claim it trains Pakistan-backed terrorists
கொழும்பு: இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு தாங்கள் பயிற்சி அளிக்கவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை குறி வைக்கும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு இலங்கை பயிற்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டினார். இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் இருப்பது அனைவருக்கும் தெரியும். டெல்லியில் உள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியா கூறுகையில்,

இந்தியாவில் தேர்தல் நடக்கும் வேளையில் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை. நாங்கள் எந்த விதத்திலும் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+