Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கள இனவாதத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கும் ராஜபக்சே: அர்ஜூன ரணதுங்கா அட்டாக்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மகிந்த ராஜபக்சே இனவாதத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கிறார். அதற்கு யாரும் துணைபோகக்கூடாது என அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார். தேர்தல் பிரச்சார களத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பலமுனை தாக்குதல் நிகழ்த்தப்படுவதால் வெற்றி வாய்ப்பு குறித்து சற்றே சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறங்குகிறார். எதிர்முனையில் நாடாளுமன்ற உறுப்பினராக பலர் போட்டியிட்டாலும், சுதந்திரக் கட்சியின் சார்பில் குருனெகல தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேதான் பிரதமர் ரேஸில் இருக்கிறார். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் முழக்கத்துடன் சிங்களர்களைக் குறிவைத்து இறங்கியுள்ளது ராஜபக்சே தரப்பு.

ரணில் தரப்புக்கு வாய்ப்பு

ரணில் தரப்புக்கு வாய்ப்பு

சமீபத்தில் சென்டர் பாலிசி ஆல்டர் நேட்டிவ்ஸ் என்ற நிறுவனம் இலங்கையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் கை தான் ஓங்கியிருக்கிறது. இதேநேரத்தில் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் ராஜபக்சேவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

117 இடங்கள் உறுதி

117 இடங்கள் உறுதி

தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ராஜபக்சேவின் இமேஜ் அப்படியே இருப்பதால் 117 இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் ஆவேன் என்று கூறி வருகிறார் மகிந்த ராஜபக்சே.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

தமிழர் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிர்ரான நடவடிக்கைகள் மூலம் சிங்கள வெறியை தூண்டியதற்கு கிடைத்திருக்கும் ஆதரவு இது என்று ஈழத்தமிழ் ஆதரவாளர்களும், இனவாதத்திற்கு எதிரானவர்களும் கூறி வருகின்றனர்.

அர்ஜூன ரணதுங்க தாக்குதல்

அர்ஜூன ரணதுங்க தாக்குதல்

தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. பிரச்சார களத்தில் பேசிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மகிந்த ராஜபக்சே இன்னமும் பதவி ஆசை கொண்டு ஆட்சியில் அமர நினைப்பது வெட்கக் கேடான செயல் என்று கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டுவதா?

இனவாதத்தை தூண்டுவதா?

கடந்த அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வேண்டும். தோற்றுப்போன மகிந்த ராஜபக்சே நிழல் போலத் தொடர்ந்து ஆட்சி பீடமேற நினைக்கிறார். மகிந்த ராஜபக்சே இனவாத்தை தூண்டி ஆட்சியில் அமர நினைக்கிறார். அதற்கு யாரும் துணைபோகக்கூடாது என அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+