இம்முறையாவது 5 ஆண்டுகாலம் முழுமையாக பிரதமர் பதவியில் நீடிப்பாரா ரணில்?
கொழும்பு: இலங்கையின் பிரதமராக 4-வது முறையாக ரணில் பதவியேற்றுக் கொண்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்..அதே நேரத்தில் இதுவரை 5 ஆண்டுகாலம் முழுமையாக ரணில் பிரதமராக பதவி வகித்தது இல்லை.. இம்முறையாவது பதவி காலத்தை முழுமையாக ரணில் அனுபவிப்பாரா என்ற ஏக்கம் அவரது தொண்டர்களிடத்தில் உருவாகி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ரணில் அந்நாட்டின் பிரதமராக 4வது முறையாக பொறுப்பேற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவி ஏற்றார்.

1993-ல் முதல் முறையாக..
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே 1993ஆம் ஆண்டு மே 7-ந் தேதி முதல் முறையாக பதவியேற்றார். அப்போது அதிபராக இருந்த பிரேமதாச குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க அதிபராகப் பதவியேற்றார். இதனால் பிரதமரான ரணில் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி வரை பதவி வகித்தார்.

ஆப்பு வைத்த சந்திரிகா
இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று டிசம்பர் 9-ந் தேதி பிரதமராக பதவியேற்றார். ஆனால் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்க திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதனால் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதியன்று ரணில் பிரதமர் பதவியை இழந்தார்.

8 மாத பிரதமர்
3வது முறையாக கடந்த ஜனவரி 8-ந் தேதி அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற மறுநாளே பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டார். கடந்த 8 மாதங்கள் மட்டுமே பிரதமராக ரணில் இருந்தார். கடந்த 17-ந் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முழுமையாக அனுபவிக்கலை
ரணில் பதவி வகித்த இந்த 3 முறையுமே 5 ஆண்டுகள் முழுமையாக அவர் பதவி வகித்தது இல்லை. தற்போது ரணில் 4வது முறையாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.
இம்முறையாவது ரணில் 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவி வகிப்பாரா? அல்லது இடையிலேயே கலகக் குரலை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பீதி ரணில் ஆதரவாளர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது.
விதி வலியது...
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications