தொடர் மிரட்டல்.. சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இலங்கையை விட்டு வெளியேறினார்!

சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்க சில ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்குப் பின் ஆசிரியர் பொறுப்பேற்றவர் பிரெட்ரிகா ஜான்ஸ்.
அவர் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தற்போது அதே பத்திரிகையின் இணை ஆசிரியரான மந்தனாவும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அண்மையில் மந்தனாவின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கியதுடன் வீட்டில் இருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். அப்போது கருத்து தெரிவித்திருந்த மந்தனா, இலங்கையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்துவதால் ஊடகவியலாளர்கள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேர்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்துக்கு பின்பு 2வது முறையாகவும் மர்ம நபர்கள் மந்தனாவின் வீட்டுக்குள் புகுந்து அவரது கம்ப்யூட்டரை அள்ளிச் சென்றனர். இதைத் தொடர்ந்து தமக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளார்.












Click it and Unblock the Notifications