பவுத்தர்களிடமிருந்து பாதுகாப்பு தாருங்கள்: ராஜபக்ஷேவிடம் முஸ்லிம் எம்,பிக்கள் மனு
கொழும்பு: இலங்கையில் புத்த மதவாதிகளிடமிருந்து இஸ்லாமிய சமூகத்தினரை பாதுகாக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்ஷேயிடம் இஸ்லாமிய எம்.பிக்கள் மனு அளித்துள்ளனர்.
புத்த மதத்துறவிகள் சிலர் இந்தாண்டு ஜனவரி மாதம் இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மதம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு காவல்துறையில் தனிப்பிரிவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மொத்தமுள்ள 18 முஸ்லிம் எம்.பிக்களில் 16பேர் தங்களது சமூகத்தை பாதுகாக்கும்படி வேண்டுகோள்விடுத்த மனுவை அதிபர் ராஜபக்ஷேவிடம் இன்று அளித்தனர்.
2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் சுமார் 70 சதவீதம் பேர் பவுத்தர்கள்.
இஸ்லாமியர்கள் 2வது மிகப்பெரிய மதப்பிரிவினராக உள்ளனர். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பொருளாதார, அரசியல்ரீதியாக செல்வாக்கு பெறுவதை புத்தமதத்தின் தீவிர போக்குடைய பிரிவினர் விரும்பாமல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications