இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நள்ளிரவுடன் ஓய்ந்தது.. வரும் திங்கட்கிழமை வாக்குப் பதிவு
கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நள்ளிரவுடன் ஓய்ந்தது. வரும் 17 ஆம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ரணில் விக்கிரசிங்கேவிற்கும், மகிந்த ராஜபக்சேவிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இலங்கையின் தேர்தல் நடத்தப்பட உள்ள 22 மாவட்டங்களில், 12,314 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 44,490 ஆகும். தேர்தலில் 6,151 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சே, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றாலும், ராஜபட்சேவுக்கு பிரதமர் பதவி அளிக்கப்படாது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications