இலங்கை: பொருளாதார சிக்கலை ஒரு மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியமே சொல்லும்.. நிதி அமைச்சர் அலி சப்ரி
கொழும்பு: இலங்கையின் பொருளாதார சிக்கலை ஒரே மாதத்தில் தீர்ப்பேன் என பைத்தியகாரர்கள்தான் சொல்ல முடியும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக இலங்கை முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் இரவும் பகலுமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் நேற்று சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்; அதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கூடும் என தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனிடையே இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி பேசியதாவது: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். 2 ஆண்டுகளில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இதனை நீடிப்பதா என்பது நம் கையில்தான் உள்ளது. இலங்கையின் தற்போதைய வௌிநாட்டு பணப்புழக்கம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கூட இல்லை. நாட்டில் வரிகளை அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் அதனை குறைத்து பிழை செய்துவிட்டோம். அரசாங்கத்தின் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 8.7 % என குறைந்துள்ளது. இதனால் விரைவில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய இருக்கிறோம்.
இதனூடாக வருமான வரியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
தற்போதைய அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி. சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்தில் சேராதது உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு காரணமாகிவிட்டது. சர்வதேச நாணயநிதியத்தில் முன்னரே சேர்ந்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் குவிந்த பிரச்சினைகள் இப்போது வெடித்துச் சிதறியுள்ளதுடன், இவை இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையை
சீர்குலைத்துள்ளது மட்டுமன்றி பரவலான பொது அதிருப்தியின்மைக்கும்; சமூக அமைதியின்மைக்கும் வழிவத்துள்ளது. அண்மைக் காலத்தில் அரசிறைத் துறையின் செயலாற்றுகைக்கு விதிவிலக்கான குறைந்த அரசாங்க வருவாய், கடுமையான மீண்டெழும் செலவினம்;, அதிக வரவுசெலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் இப்போது நீடிக்கமுடியாதுள்ள திரட்சியுற்ற கடன் ஆகியவை செல்வாக்கு செலுத்தியுள்ளன. பலவீனமான அரசிறை நிலைமையானது, கடன் மதிப்பீடு குறைப்பு, சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் இழப்பு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஆகியவற்றில்
வெளிப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, அரசாங்கம் மத்திய வங்கியின் பண நிதியுதவி உட்பட வரவு செலவுத் திட்டத்திற்கான உள்நாட்டு நிதியுதவியில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, இது குறிப்பிடத்தக்க பேரண்டப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுத்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, வெளித்துறை அழுத்தத்தைக் குறைக்க விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மிக முக்கியமாக 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த வரி விதிப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொடர்பான தளர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது.
அரசாங்க செலவினங்களில் ஒழுங்கமைப்புத் தேவையான பல அம்சங்கள் உள்ளன. உற்பத்தித்திறனற்ற அரசாங்க மானியம் மற்றும் கையூட்டுகளின் கலாச்சாரம் இனி சாத்தியமில்லை. மாறாக, ஒரு நிலையான பேரண்டப்-பொருளாதாரச் சூழலானது, தேவையான சமூகப் பாதுகாப்பு
வழிமுறைகளுடன் குடிமக்கள் செழிக்க அதிகாரமளிப்பதுடன் நிலையானதும் மற்றும் பேண்தகுநிலையுடையதுமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். இந்த இக்கட்டான நேரத்தில் தேவையான கொள்கை மறுசீரமைப்புக்களைச் செயல்படுத்தத் தவறினால், விளைவு பாரதூரமானதாக அமையும். கடந்த மாதங்களில் இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் பாதகமான பெறுபேறுகளை இலங்கை ஏற்கனவே
அனுபவித்துள்ளது. எனவே, இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை நீண்டகாலமாக நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும், கடினமான ஆனால் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக இலங்கை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்வாறு அலி சப்ரி பேசினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications