இலங்கையை 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்- கூட்டாட்சி முறை அவசியம்.... வடக்கு மாகாண சபை பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: இலங்கையை வடக்கு கிழக்கு மற்றும் சிங்கள மாநிலங்கள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; வடகிழக்கில் முஸ்லிம்களுக்கும் சிங்கள மாநிலத்தில் மலையக் தமிழர்களுக்கும் தன்னாட்சி பிராந்திய சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபை பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. இந்த புதிய அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வடக்கு மாகாண சபையில் முதல்வர் வின்கேஸ்வரன் முன்வைத்த அம்சங்கள்:

- இலங்கையில் ஒற்றையாட்சிக்கு பதிலாக கூட்டாட்சி முறை அமுல்படுத்தப்பட வேண்டும்.
- இலங்கை குடிமகன் ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறை மாற்றப்பட வேண்டும்.
- எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட அதிக பலன்களை கேட்க கூடாது.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும்.
- சிங்கள மொழி மாநிலத்தில் மலையக தமிழர்களுக்காக ஒரு தன்னாட்சிய பிராந்திய சபை உருவாக்கப்பட வேண்டும்.
- வடக்கு, கிழக்கு மாநிலம், வடக்கு, கிழக்கு மாநில நாடாளுமன்றம், வடக்கு கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை மற்றும் மலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
- தமிழ் பேசும் மாநில அரசில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் என்ற ஒருவருக்கு முழுமையான அதிகாரம் இருக்ககூடாது.
- இலங்கையின் ஆட்சி மொழிகளாக சிங்களமும் தமிழுமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
- வடகிழக்கு மாநிலத்தின் நடவடிக்கைளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
- மலையக பிராந்திய சபையின் பதிவுகள் தமிழிலோ சிங்களத்திலோ இடம்பெறலாம். அதில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் இருக்க வேண்டும்.
- வடக்கு, கிழக்கு மாநில மற்றும் முஸ்லிம் மலையக தன்னாட்சி சபைகளின் சுயாட்சியானது கூட்டாட்சி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications