தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி சஸ்பென்ட்!

ஈழத் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: லண்டனில் ஈழத் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்த கொடூர சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இலங்கை சுதந்திர தினத்தை நிராகரித்து ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

Srilankan Army officer suspend by Govt

லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் கோபமடைந்த இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ உள்ளிட்டோர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

அத்துடன் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என மூன்று முறை சைகையால் மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த இங்கிலாந்து எம்பிக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரி பணியில் இருந்து உடனே சஸ்பென்ட் செய்யப்படுகிறார்; அவர் மீது ராணுவ ரீதியிலான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+