அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சே மகன் வீடு முன்பாக இலங்கை மக்கள் போராட்டம்- சுவீடனிலும் ஆர்ப்பாட்டம்
லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள அவரது மகன் வீடு முன்பாகவும் இலங்கை மக்கள் போராட்டம் நடதிதினர்.
Recommended Video
இலங்கை தலைநகர் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை போராட்டக் குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். வரும் 13-ந் தேதி தாம் பதவி விலகுவேன் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

தற்போது கோத்தபாய ராஜபக்சே எங்கே இருக்கிறார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் தப்பி ஓடிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இன்னொருதரப்போ, ராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கிறார் கோத்தபாய என்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே வீட்டுக்கு முன்பாக இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். கோத்தபாய உடனே பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை நாட்டவர்கள் கூறுகையில், ராஜபக்சே குடும்பத்தினர் அமெரிக்காவின் ஏராளமான வீடுகளை வாங்கு குவித்து பதுங்கி உள்ளனர். இப்பணம் இலங்கை மக்களுடையது. ஆகையால் அமெரிக்காவில் உள்ள ராஜபக்சே குடும்ப சொத்துகளை அமெரிக்கா அரசு பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்து இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் சுவீடனிலும் இலங்கை மக்கள், கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தி உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications