பகீர்.. இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே சுற்றிய தற்கொலை படை.. ராணுவம் துப்பாக்கி சூடு!

இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

இலங்கை: இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்து ஒருவாரம் ஆகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இலங்கை தலைநகர் கொழும்பு இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

ஈஸ்டர் அன்று இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

தொடர் சோதனை

தொடர் சோதனை

இதனால் கொழும்பில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் கொழுப்பில் ராணுவம் தீவிர சோதனை செய்தது. ராணுவம் நடத்திய சோதனையில் பல இடங்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பிரதமர் வீடு

பிரதமர் வீடு

இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலை படை தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அலரி பகுதியில் உள்ள ரணில் வீட்டிற்கு அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அம்பாறை மோசம்

அம்பாறை மோசம்

அதேபோல் இலங்கையின் அம்பாறை சம்மாந்துறையில் உள்ள வீடு ஒன்றில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டை அடுத்து பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தப்பிசென்றனர். பின்னர் அந்த வீட்டில் நடத்திய சோதனையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகள், துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

அதேபோல் ரணில் வீட்டு வாசலில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரணிலின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+