யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்... விடுதலை வேண்டி!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி விட்டது. பின்னர் அரசின் நடவடிக்கைகளால் மீனவர்கள் விடுவிக்கப் படும் போஹ்டு அவர்களது படகுகளை திருப்பித் தர இலங்கை கடற்படை சம்மதிப்பதில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அம்மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை அவர்களது காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே, சிறையில் அளிக்கப் படும் உணவால் தமிழக மீனவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+