கொல்லப்பட்ட தேவியன் இலங்கை விமானபடை தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் விமானி!!
கொழும்பு: இலங்கை ராணுவத்துடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார்.
விடுதலைப் புலிகளின் 2 விமானங்கள் இலங்கை ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக விடுதலைப் புலிகளாள் பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொல்லொனவா பெட்ரோலியக் கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்கிறது இலங்கை ராணுவ அறிக்கை.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் புலிகளின் 2 விமானங்களும் அழிந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தப்பி சென்றார் தேவியன். ஐரோப்பாவில் இருந்து நெடியவனால் கோபி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தேவியனும் இலங்கைக்கு சென்று இணைந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இலங்கை அரசு கோபியுடன் சேர்ந்து தேவியனைப் பற்றியும் தகவல் தரக்கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று நடந்த மோதலில் கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications