சிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்
சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது 99ஆவது வயதில் காலமானார்.
1919இல் பிறந்த இவர் 1949 முதல் சிங்கள சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார்.
முழுநீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் என இவர் உருவாக்கிய 28க்கும் அதிகமான படங்களில் பல, சர்வதேச புகழ் பெற்றவையாகும்.
ரெக்காவ, கம்பெரலிய,நிதானய, கொலு ஹடவத்த போன்ற இவரது படங்கள் இலங்கையின் கிராமிய வாழ்வை உலக அரங்குக்கு கொண்டு சென்றவையாக பாராட்டப்படுபவையாகும்.
இந்திய திரைப்படங்களின் பிரதிகளாக இருந்த இலங்கை சினிமாவுக்கு நவீன யாதார்த்தத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு செல்நெறி வகுத்தவர் இவர் என்றும் சிங்கள சினிமாவுக்கு சர்வதேச மட்டத்தில் ஒரு அடையாளத்தை தந்தவர் இவர் என்றும் இவரை வர்ணிக்கிறார் சினிமா விமர்சகரும், இயக்குனருமான ஞானதாஸ் காசிநாதர்.
லண்டனில் சினிமா கல்வியை முடித்து இலங்கை திரும்பிய இவர், 2006ஆம் ஆண்டு வரை சினிமா துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார்.
கிராமிய வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு 1956இல் இவர் இயக்கிய ரெக்காவ என்ற திரைப்படந்தான், முதன் முதலில் அவுட்டோரில் படமாக்கப்பட்ட சிங்கள திரைப்படமாகும்.
இலங்கை சினிமாத்துறையில் இது ஒரு மறுமலச்சியாக பார்க்கப்படுகின்றது. சர்வதேச மட்டத்தில் இது பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டாலும், வணிக ரீதியில் இது தோல்விப்படமாகும்.
இலங்கையின் பிரபல புனைகதை ஆசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த கம்பெரலியவும் சிறந்த படமாகப் பேசப்பட்டதாகும். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இவரது மனைவியான சுமித்ராவும் ஒரு திரைப்பட இயக்குனரே.
பிற செய்திகள்:
- வட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்
- பிரபல கால்பந்து தொடரில் பங்கேற்கும் "முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்"
- உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்
- ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications