For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை இலங்கையை பிளவுபடுத்தாது: சி.வி. விக்னேஸ்வரன்

By Mathi
Google Oneindia Tamil News

Vigneswaran
யாழ்ப்பாணம்: தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை இலங்கையை பிளவுபடுத்தாது..மாற்றாக ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதல்வராக இன்று காலை பதவியேற்ற பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை நாட்டை பிளவுபடுத்தாது. இலங்கையின் ஐக்கியத்துக்கே வித்திடும்.

சிங்களர்கள் எப்படி தங்களது கலாசாரம், மொழியை மதிக்கிறார்களோ அதுபோல் தமிழ் பேசும் மக்களும் தங்களது கலாசாரத்தையும் மொழியையும் மதிக்கின்றனர். இந்த மண்ணில் அமைதி என்பது சாத்தியமானது.

இங்கு வன்முறை என்பதற்கு இடமில்லை. இந்தத் தீவில் இரு இனங்களும் ஐக்கியத்துடன் இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

English summary
Newly appointed Northern Province Chief Minister C.V. Wigneswaran today reiterated calls for self determination for Tamils in Sri Lanka. End of the swearing-in ceremony he release special statement to media , According to the statement. Chief Minister said that the Tamil people in the North have mandated him to perform his duties on a long term as well as a short term perspective.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X