தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த முடியாது...: இலங்கை அமைச்சரின் திமிர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Won't Stop Arrests of Indian Fishermen Despite Talks: Lanka
கொழும்பு: பேச்சுவார்த்தை நடந்தாலும், தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், செவ்வாய்கிழமையன்று 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''இந்தியாவுக்கு சென்றபோது, சிறப்பான வசதிகளை அளித்து எங்களை நன்றாக கவனித்து கொண்டார்கள். எங்கள் குழுவின் முழுச் செலவையும் இந்தியா ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு விவகாரத்தில் மத்திய அரசு சுதந்திரமாக செயல்படுகிறது. எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய அரசு எங்களிடம் சொன்னதே இல்லை.

தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கு நான், எங்கள் கடல் எல்லையில் நுழைய யாருக்கும் உரிமை இல்லை, பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் என கூறிவிட்டேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+