யாழ். இணுவில் முருகன் கோவில் தைப்பூச திருவிழா – தேர் இழுத்து பக்தர்கள் கொண்டாட்டம்!
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தின் இணுவில்லில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று அதிஉயரமான தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் இருந்து 6.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இணுவில் கந்தசுவாமி கோவில். பிரபல தவில்-நாதஸ்வர கலைஞர்கள் மங்கல வாத்தியம் இசைக்க, கரகாட்ட கலைஞர்கள் தமது கலையினை வெளிப்படுத்த கந்தசுவாமியின் தேர் ஊர் கூடி இழுத்து வரப்பட்டது.

வள்ளி-தெய்வானை சமேதரராய் அத்திருத்தேரில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த கோவிலானது பெரிய சந்நியாசியார் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சந்நியாசியார் அருள்பாலித்த இடம் ஆகும். இவரின் முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த கோவிலின் திருத்தேர் ஆகும்.

தமிழ்நாட்டிலே தாம் கற்ற கலையாற்றலை வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் காத்திருந்த சிற்ப வல்லுநர்களிடம் எம்பெருமான் சந்நியாசியார் வடிவில் சென்று இக்கந்தசாமி கோவிலுக்கு தேர் செய்ய வரும்படி கூறி அருளினார்.

1912ஆம் ஆண்டு இத்தேர்தல் உருவாக்கப்பட்டது. 35 அடி உயரமான இந்த தேருக்கு நான்கு சக்கரங்களும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications