கருப்பு சூரியனை சுற்றி நெருப்பு வளையம்..ஆஸ்திரேலியாவில் நிங்கலூ முழு சூரிய கிரகணத்தை ரசித்த மக்கள்
சிட்னி: அரிதான நிங்கலூ ஹைபிரிட் முழு சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சூரியனை முழுமையாக நிலா மூடிய பின்னர் கருப்பாக மாறியது. சற்று நேரத்தில் கருப்பு சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றியதை மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள யாகன் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கியது. படிப்படியாக கிரகணம் தொடர்ந்து 9.45க்கு முழுவதுமாக சந்திரனின் நிழல் சூரியனை மறைத்தது. அப்போது சூரியன் கருமையாக காணப்பட்டது. 1 நிமிடம் மட்டுமே முழு சூரிய கிரகணம் நீடித்தது. அப்போது வானத்தில் பறவைகள் இரவு தொடங்கி விட்டதாக நினைத்து கூடுகளை நோக்கி பறக்க ஆரம்பித்தன.
முழு சூரிய கிரகணத்தை காண ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சற்று நேரத்தில் கருப்பு சூரியனை சுற்றி நெருப்பு வளையம் போல காட்சி தென்பட்டது. அப்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள யாகன் சதுக்கத்தில் பார்த்து ரசித்த மக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சிலர் கிரகணத்துடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

இன்றைய தினம் கிரகணத்தின் உச்சபட்ச நிகழ்வு 9.45 மணி முதல் 10 மணி வரை நீடித்தது. பின்னர் படிப்படியாக கிரகணம் விலகத்தொடங்கும். பிற்பகல் 12.29 மணி சூரிய கிரகணம் நீடிக்க உள்ளது. கிட்டதட்ட 5 மணி நேரம் 24 மணி நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடிக்கிறது.
இந்த நிகழ்வு இந்தியாவில் தென்படாது என்றாலும், முழு சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மட்டுமே காண முடிந்தது. நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மட்டுமே இந்த கிரகணம் தெரியக்கூடும் என்பதால் இந்த கிரகணத்திற்கு ஆஸ்திரேலியாவின் 'நிங்கலூ'கடற்கரை பெயர் சூட்டப்பட்டது. ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பகுதி அளவாக மட்டுமே இந்த கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
"நிங்கலூ" அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் ஏற்படுத்தி வானத்தில் அதிசயக்கத்தக்க வேடிக்கையை நிகழ்த்தியது. இந்தியாவில் காண முடியாவிட்டாலும் இணைய தளங்களில் நேரலையில் கண்டு ரசிக்க முடிந்தது.

இந்த ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி புரட்டாசி 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு 08.34 மணி முதல் இரவு 02.25 மணி சித்திரை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது. மேற்கு பகுதிகளான வட தென் மத்திய அமெரிக்க பகுதிகள், மெக்ஸிகோ, ஆகிய நாடுகளில் தெரியும்.
அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு 01.03 முதல் இரவு 02.24 வரை ஐப்பசி 11ஆம் தேதி அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் பகுதி நேர சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 09.12 மணிக்கு நிகழ உள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, கனடா,நார்வே,ஐஸ்லாந்து,பிரிட்டன், ஸ்பெயின்,போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இந்த முழு சூரிய கிரகணம் தெரியும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications