உள்நாக்கில் ஆபரேஷன்.. திடீரென மாறிய உச்சரிப்பு..விநோத நோயால் பாதிக்கப்பட்ட ஆஸி. பெண்!
உள்நாக்கு அறுவை சிகிச்சையால் தனக்கு அயர்லாந்து மொழியில் பேசும் திறன் கிடைத்திருப்பதாக ஆச்சர்யப்படுத்துகிறார் ஆஸ்திரேலிய பெண் ஒருவர்.
சிட்னி: பொதுவாக அறுவை சிகிச்சை செய்துகொண்டால் உடலளவில் மாற்றம் நிகழ்வது சகஜம். ஆனால் பேசும் மொழி உச்சரிப்பில் மாற்றம் ஏற்படுவது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.
ஜி மெக்யன் எனும் இளம் பெண் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். முதல் முதலாக பேசியதில் இருந்து ஆஸ்திரேலிய உச்சரிப்பிலேயே பேசிவந்தார். வேறு உச்சரிப்புகளை அவர் முயற்சி கூட செய்து பார்த்தது இல்லை.
இந்த சூழலில் மெக்யனுக்கு உள்நாக்கில் சதை வளர்ந்திருக்கிறது. அதற்காக அவர் மருத்துவர்களிடம் சென்றார். அவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உள்நாக்கில் வளர்ந்த சதையை வெட்டி எடுக்க முடிவு செய்தனர்.

அதிர்ச்சி
இதையடுத்து அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. உள்நாக்கில் வளர்ந்த சதையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெட்டி எடுத்தனர். எல்லாம் சரியாகிவிட்டது என நினைத்த மெக்யனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உச்சரிப்பில் மாற்றம்
அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்து எழுந்து மெக்யன் பேச முயன்றார். அப்போது தனது உச்சரிப்பில் ஏதோ ஒரு மாற்றம் உருவாகி இருப்பதாக அவர் உணர்ந்தார். தொண்டையில் அறுவைச் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட காயம், இது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என அவர் நினைத்தார்.

ஆஸி. டூ அயர்லாந்து
ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு மெக்யனின் உச்சரிப்பு முழுமையாக மாறிவிட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பு வரை ஆஸ்திரேலிய உச்சரிப்பில் பேசி வந்த மெக்யன், தற்போது அயர்லாந்து உச்சரிப்பில் பேசுகிறார். எவ்வளவு முயன்றும் அவரால் பழையபடி பேச முடியவில்லை.

வெளிநாட்டு உச்சரிப்பு நோய்க்குறி
பயந்துபோன அவர் மருத்துவர்களின் உதவியை நாடினார். மெக்யனை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள் மெக்யனுக்கு வந்திருப்பது, 'வெளிநாட்டு உச்சரிப்பு நோய்க்குறி' (foreign accent syndrome)எனக் கூறி புதிதாக ஒரு குண்டை தூக்கி போட்டனர். கடந்த 100 ஆண்டுகளில் 100 பேருக்கு மட்டுமே இந்த 'வெளிநாட்டு உச்சரிப்பு நோய்க்குறி' வந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வருத்தத்தில் மெக்யன்
இந்த விநோத நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ள மெக்யன் தன்னால் பழையபடி ஆஸ்திரேலிய உச்சரிப்பில் பேச முடியாமல் போனதை எண்ணி நொத்து போயிருக்கிறார். கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாக உள்நாக்கு சதையை அறுவைச் சிகிச்சை செய்யப்போய் இப்படி ஆகி விட்டதே என வருத்தத்தில் இருக்கிறார் மெக்யன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications